ஆயுசு கெட்டி

தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பெண்மணியிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். ஸாரி, மேடம் உங்களை என்னால் காப்பாத்த முடியாது. நோய் ரொம்பவே முத்திவிட்டதால ஆறு மாசம்தான் நீங்கள் உயிரோடவே இருக்க முடியும்.

கேட்க அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்றாலும் சற்று நேரத்திலேயே அந்தப் பெண்மணி சுதாரித்துக் கொண்டாள்.

குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான உதவிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீதி காலத்தை மகிழ்ச்சியோடு கழிக்கத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்ன டாக்டர், இந்த ஆறு மாத காலத்தை எப்படிக் கழிப்பதாக உத்தேசம் ? என்று கேட்டார்.

என் மாமியாரோட இருக்கப் போறேன் டாக்டர் என்றாள் அந்தப் பெண்மணி.

என்னது.. . உங்க மாமியாரோடவா ? அவங்களுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம்னு ஏற்கெனவே சொல்லியிருந்தீங்களே ?

அதான் டாக்டர் விஷயமே, அவங்களோட இருந்தா இந்த ஆறு மாத காலமே எனக்கு அறுபது வருஷமா தோணும்

எழுதியவர் : (23-Jul-14, 8:46 pm)
பார்வை : 263

சிறந்த நகைச்சுவைகள்

மேலே