நிலாச்சோறு
என் சந்தோசத்தில்
என்னோடு சிரிக்கிறது..,
என் உற்சாக தருணங்களில்
சிலாகிக்க துடிக்கிறது,,,
என் அழுகை உதட்டை
தீண்டும் முன்னே
கண்ணீர்க் கடையை திறந்து
விடுகிறது,,,
நிழலைப் போலவே,
என்னோடு எண்ண அலைகளை
அனுப்பி வைக்கிறது,,,
அது என்னை பிரதிபளிக்கும்
கண்ணாடியுமல்ல,,,
காமத்தை அள்ளி வீசும்
காதலுமல்ல,,,
நாளை முதியோர் காப்பகத்தில்
விடப்படபோகிறோம் என்று
தெரியாமல்,,
என் மகனுக்காய்
நிலாச்சோறு சமைத்துக்கொண்டிருக்கும்,,,
என்னை சுமந்த
கர்பப்பைக்குச் சொந்தக்காரி,,,,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
