வீதியோரம் மழலையின் அழுகுரல்

நான் செய்த தவறு தான்
என்னவோ அம்மா!
வயிற்றில் எட்டி உதைத்தேனென்று
என்னை வீதியில் எறிந்தயோ!
அப்பா இல்லாமல் பிறந்தது
என் தவறாம்மா!
ஒரு முறையேனும் என் முகம்
பார்க்கத் தோனலயாம்மா!
பாத்துமாதம் வயிற்றில் சுமந்த உனக்கு
ஒரு நொடி கையில் சுமக்க
விருப்பம் இல்லையாம்மா !
உன் குட்டி பாப்பாவிற்கு பசிக்கிறது
ஒரு முறையேனும் பாரம்மா!
காற்றுகூட தீண்டாத உன் பாப்பாவின்
உடலெங்கும் ஈக்கள் மொய்க்கிறதம்மா!
உன்னை மட்டும் பார்க்க
நினைத்த உன் பாப்பாவின்
கண்களை பருந்துகள்
கொத்திச்செல்கின்றன
உன்னை எட்டி உதைத்த
என் கால்களை நாய்கள்
எல்லாம் இழுத்து செல்கின்றன
ஐயோ! ரொம்ப வலிக்குதம்மா!
உன் பாப்பாவின் அழுகை
உன்னை தீண்டலையாம்மா!
என்னை தின்று தீர்த்த
அந்த மிருகங்களுக்குகூட
இதயம் இருக்கிறது போல்
அதனால்தான் என் இதயத்தை
மட்டும் விட்டு சென்றனவோ
பத்து மாதங்கள் உன்னோடு
இருந்த உன் பாப்பாவின்
குட்டி இதயம் பத்து நொடிபொழுதில்
உன்னை விட்டும் என்னை
விட்டும் பிரிந்து கிடக்கிறதம்மா!
என் துடிப்பு உனக்கும்
கேட்கிறதாம்மா! இன்னொரு
ஜென்மம் ஒன்று இருந்தால்
உனக்கே மீண்டும் பிறக்கனும்மா!
ஆனால் அப்போது அப்பாவும்
உன் கூட இருப்பாரம்மா!
ஒரு வேளை அப்போதும்
என்னை பிடிக்கவில்லையென்றால்
விடுதியில் சேர்த்துவிடும்மா!
வீதியில் எறிந்துவிடதே!
இப்போது துண்டித்தது போல்
அப்போதும் துண்டிக்க படலாம்
உன் பாப்பாவின் குட்டி இதயம்!

அ .பிரியா

எழுதியவர் : sajipriya (23-Jul-14, 1:45 pm)
பார்வை : 151

மேலே