உயிர்பறிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
கம்பிகளுக்கும்
கண்ணாடிகளுக்கும்தான்
கண்தெரியாது என்றால்
கடவுளுக்குக்கூட
சிலநேரம்
தொலைந்துவிடுகிறது
தூரத்துபார்வைகள்.....!!!
ஆள் இல்லாத தடுப்பில்
எப்படி பறிக்கப்பட்டது
சின்னசிறு பூக்கள்.......
இரும்பில் செதுக்கப்பட்ட உனக்கு
இதயம் துடிப்பது
எப்படிதெரியும்
இழக்கப்போகும் உயிருக்காய் ...!!!
தொல்லையை தவிர்க்க
எல்லைகள் வைத்தால்
எல்லைகளே எமனாகிப்போகும்
சூழ்ச்சியை எங்குபோய் தீர்ப்பது ?
காற்றில் கேட்டது
கண்ணீரோடு
கலைந்த உயிர்களின்
கதறல்கள்.....!!!
கவிதாயினி நிலாபாரதி