எது நாகரீகம்

எது நாகரீகம்?

மனிதன் இன்று தங்களை நாகரீகமானவன் என்று சொல்லி கொண்டு இருக்கிறான். ஆனால் எது நாகரீகம் என்று தான் தெரியவில்லை. பெண்ங்களை பாலியல் துன்புறுதுவதுதான் நாகரீகமா?

மனிதன் நிர்வாணமாக வாழ்ந்த போது கூட இது மாதிரியான சம்பவத்துக்கு சான்று இல்லை. ஆனால் இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு காரணம் என்ன?

சமீபத்தீல் டெல்லியில் ஓடும் பேருந்தில் கும்பலாக சேர்ந்து ஒரு மருத்துவ மாணவியை கற்பழித்ததும்,உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவமும்,தமிழ்நாட்டில் தற்போது நடந்த நான்கு வயது சிறுமியின் கதியும் நமது நெஞ்சை உலுக்கியது.

இது மாதிரியான சம்பவங்களுக்கு காரணம் என்ன . பெண்களின் நவீன உடையா, மனித நாகரீகத்தின் வளர்ச்சியா, பாலுணர்வு வறுமையா இல்லை பெண்களை பற்றியா சரியன புரிதல் ஆண்களிடம் இல்லையா?

பெண்களின் உடைதான் பாலியல் துன்புறுத்துவதர்க்கு காரணம் என்றால், தமிழ்நாட்டில் தற்போது நடந்த நான்கு வயது சிறுமியின் உடையில் என்ன தவறு உள்ளது ?



பாலியல் சம்பவத்துக்கு இன்று அரசாங்கம் எத்தனையோ சட்டங்களை கொண்டு வந்தாலும் இது மாதிரியான தொடர் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் இதற்கான போரட்டங்களையும் நடத்திகொண்டேதான் இருக்கின்றன ஆனாலும் எந்த பயனும் இல்லை.

இது போன்ற சம்பவங்களுக்கு அரேபிய நாடுகளில் கொடுக்கப்படும் கடுமையான தண்டனைகளை போன்று நமது நாட்டிலும் நிறைவேற்றினால் தான் இது மாதிரியான சம்பவங்கள் குறாயுமா?

இது மாதிரியான சம்பவங்கள் செய்தவர்களுக்கு மரனதண்டனை கொடுத்தாலும் அது தவறு என்று சொல்லும் மனித உரிமை கழகமும் மரணதண்டனைய எதிர்த்து போரடுபவர்களும் சொல்கிறாகள்.


ஆணையும் பெண்ணையும் இந்த சமூகம் எப்போது சமமாக பர்க்கிறதோ அப்போது இந்த சம்பவங்கள் நடக்காது என்று சொன்னர்கள் ஆனால் தொர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த நவீன உலகத்தில ஆண்கள் பெண்களை வெறும் உறுப்புகளாகவும் பிள்ளை பெற்று தரும் இயந்திரமாகதான் பார்க்கீறார்களா? ஆதனால் தான் இந்த சம்பவங்களுக்கு காரணம்மா?



இந்த மாதிரியான சம்பவத்துக்கு காரணம் வேலை இல்லாத வெறுமன சுற்றுபவனும், குடித்துவிட்டு ஊர் சுற்றுபவனும் தான் காரணம் என்று சொல்கிறார்கள் . ஆனால் இந்த மாதிரியான சம்பவத்தில் அரசியல்வாதிகளும், ஆசிரியர்களும் ஏன் இன்னும் எத்தனையோ பெரிய மனிதர்களும் சம்பந்தபட்டுள்ளனர்


பாலியல் சம்பவத்தை தடுப்பதர்க்கு பள்ளிகளில் பாலியல் கல்வியை நடைமுறைபடுத்தினால் தான் குறைவதர்க்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள் ஆனால் இதில் பல ஆசிரியர்களும் சம்பந்தபட்டுள்ளனர்


இந்த மாதிரியன பாலியல் சம்ப்வத்துக் காரணம் என்ன? சமுதயமா, தனிமனிதனா இல்லை இந்த சமுதயாம் தனி மனிதனக்கு கற்று தர வேண்டிய ஒலுக்கத்தை கற்று தரவில்லையா.

இதர்கான திர்வு தான் என்ன?

எழுதியவர் : KARTHIKEYAN (24-Jul-14, 7:21 pm)
சேர்த்தது : கார்த்தி கேயன்
Tanglish : ethu naagareegam
பார்வை : 158

மேலே