மௌனக்கூச்சல்

அலைகடலின் ஆழத்தில் ஒளி புகா மோனத்தில்
ஒற்றை திமிங்கலத்தின் மௌனக்கூச்சல்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
இருளடர்ந்த கானகத்தின் ஒளி புகா மோனத்தில்
களிறோன்றின் கனம்மிகுந்த காணம்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
காதல் கொண்ட உயிரெல்லாம் உகுக்கும் ஒலி
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
பரிணாமத்தின் கிரீடம் என புகழப்படும்
மானுடத்தின் மௌனக்கூச்சல் கனம்மிகுந்த காணம்
காதல் மொழி கவிதை தானோ .