எனக்குஎமன்யார்
எனதுஇலைகள்
எங்கே போயின ...?
எனதுகிளைகள்
ஏன் முறிந்தன ...?
பட்டுப்போனமரத்தின் ஏக்கக்கேள்விகள்
்எட்டிப்பார்பார்
்யாரும் இல்லாமல்
்மனமுடைந்து
நிற்கிறது பட்ட மரம்
நான்....!!!
காதலுடன்என் கிளையில் கொஞ்சிகுழாவிய இளம் பறவைகளின்்
கொஞ்சல் சத்தத்தை கேட்பதைஇழந்தேன் .........!!!
வாட்டும் வெயிலில்நடை தளர்ந்து வரும் போதுநிழலுக்காக வந்து பேசும்மனிதர்களின் இன்பபேச்சைகேட்பதை இழந்தேன் .....!!!
ஊஞ்சலலாடி விளையாடும்சின்ன சின்ன முத்துக்களின்செல்லமான சண்டையையும்்
ஓலமிட்டு அழும் சத்தத்தையும்கேட்பதையும் இழந்தேன் ....!!!
காதலர்கள் மரத்தடியில்ஊடல் செய்து உறவாடும்அழகை என் கள்ள கண்ணால்பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!
பட்டுப்போனஎன் உடலில் இப்போபுழுக்களும் வண்டுகளும்அரித்துக்கொண்டிருக்கபோதாததற்கு குறைக்குமரங்கொத்தி வந்து வெந்த புண்ணில்வேல் பாய்வதுபோல்
கொத்துகிறது ...!!!
அதோவருகிறது என் பாசக்கயிறுகோடரி என்ற சாவுகாவிஏய் கோடரியே -கவனிநீ இருப்பது என் கடந்த காலகிளையின் பகுதியில் -நீயும்நன்றி கெட்டவனா ...?என்னை அழிக்க என்னையேபயன்்
படுத்துகிறாய் .....!!!
(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம் பகிர்வோம் வளர்ப்போம் )