அத்தை மகளே
கோப்பையின் ஓரத்தில் ஓட்டியும் ஒட்டாமலும்
உறிஞ்சி குடிக்கும் இதமான தேனீர் போல -அன்பே
உன் இதழ் ஒத்தடத்தில் உன் காதலை
யாசிக்க துடிக்கிறேன் .........!
வாச மலரில் நேசம் தேடும் பாட்டம் பூச்சியாய்
உன் பார்வையின் நேசத்தை பகிர விரும்புகிறேன்
யாரும் இல்லா தீவில் நம் இருவரின் -உறவை
வளர்க்க இறைவனை வேண்டுகிறேன்
உன் கருங் கூந்தலில் என் முகம் புதைத்து
அதில் என்னை பதியம் போடுகிறேன் - உன்னை
என் மார்பில் அணைத்து அழுது ஓய நினைக்கிறன்
நம் காதல் பயிர் வளர கண்ணீரை ஊற்றுகிறேன்
உன் மென்காந்தள் விரலை மென்மையாய் கடித்து
நம் காதலுக்கு ஓத்தடம் கொடுக்கிறேன்- உன்னை
உச்சி முகர்ந்து நீ தலையில் சூடும் நல்ல
பிச்சிப் பூவாய் இருக்க துடிக்கிறேன்
அஞ்சுகமே ஆரணங்கே அள்ளக் குறையா அமுதமே
மனம் ஏனோ தவிக்குது ..! மானே உன்னை நினைக்குது
மார்கழி மாசம் போனவுடன் அத்தை மகளே ரத்தினமே
தையிலே வருவேன் தங்கக் தாலி தருவேன்