கனாவாகி போன உறவுகள்

கனாவாகி போன உறவுகள்

ஒய்யாரமாய் காலாட்டி
மடியினில் படுத்துறங்க
எனக்கில்லை ஒரு பாட்டி

சாய்ந்தாடி கதைகேட்க
எங்க காலத்தில்
என்று கதைசொல்ல
என்றுமில்லை எனக்கொரு தாத்தா

மீசையை தடவி கொடுக்க
தோளில் ஏறிவிளையாட
பார்த்ததில்லை ஒரு பெரியப்பா

கண்ணாலே மிரட்டி
ஒழுக்கமாய் வளர்த்திட
நான் கண்டதில்லை
என் பெரியம்மாவை

அம்பாரி சவாரி செய்ய
யானையாய் என்னை
தாங்கிடும் சித்தப்பா
யாரென்று நான் அறியேன் ?

சைக்கிளில் ஊர்வலம்
நான் போகும் நகர்வலம்
கூட்டிசெல்ல இல்லை
மாமன் எனக்கிங்கு

சொந்த பந்தமெல்லாம்
படித்தறிந்த புத்தகத்தில்
கண்டதில்லை
ஒருநாளும் வாழ்கையில் !!!!!
காதலித்து மணம்புரிந்த
காதலரின் மகள்
எப்படி அறிவாள்
எவர்கள் என் சொந்தமென்று ?

கதையாகி போன
வாழ்வில் உறவுகள்
விடுகதையாகி போனது
விடை சொல்ல யாருமில்லை
தனியாக களிக்கிறேன்
என் காலத்தை
தாய் தந்தையோடு!!!!!!!!!!!!!!!!!

பாண்டிய இளவல் மது. க

எழுதியவர் : பாண்டிய இளவல் மது. க (30-Jul-14, 12:33 am)
பார்வை : 83

மேலே