மண்ணில் தவழும் என் மடி மீன்

மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்கள் பனித்து நீர் வடிவ தேன்.....??

விண்ணில் ஒளிரும் நிறை மதி முகம்
எண்ணிட இனிக்கும் மழலை மொழி சுகம் ....!!

வெண்பா லெல்லாம் தாய்ப் பாலுக் கீடோ
பெண்சிசுவே முலை அமுது பருக நீவா .....!!

தண்டமிழ் கானம் நான் பாடக் கேட்டு
வண்ணப்பூஞ் சிட்டே துயில் கொள் வாய் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Aug-14, 7:52 am)
பார்வை : 230

மேலே