===+++மண்ணில் தவழும் மடி மீனே+++===

மண்ணில் தவழும் மடி மீனே - என்
கண்ணில் குமிழும் விழி மீனே
விண்ணில் முளைக்கும் ஒளி மீனே - என்
நெஞ்சில் குதிக்கும் களி மீனே---
தாய்மை தந்த கரு மீனே - என்
தலையை நிமிர்த்திய சிறு மீனே
பசியும்கூட மறந்திடுவேன் - உன்
பால்முகம் கண்டாள் குளிர்ந்திடுவேன்---
தவழும் தென்றல் காற்றல்லோ - நீ
செந்தமிழ் வயலில் நாற்றல்லோ
அம்மா என்று நீயழைத்தால் - என்
தாய்மடி சுரந்திடும் ஊற்றல்லோ...!!!
--------------நிலாசூரியன்.
=::= இது போட்டிக்கான கவிதையல்ல. - தாய்ப்பால் தினத்திற்கு சமர்ப்பணம்.