மகளுக்காய்

மகளுக்காய்
ஓடி வரும் பிள்ளாய்
நின்றிடுவாய்
உன் தந்தையின் சொல்மொழி
கேட்டிடுவாய்
உன்விருப்பங்கள் ஒவ்வொன்றாய்
காத்திடுவேன்
உன்கண்ணில் நீர் வாராது
காவல் நிற்பேன்
உன் கேள்வியில்
நானும் கிறுகிறுத்து போனனேன்
அதன் ஞானத்தில்
சிலையாகி போனனேன்
உனக்காய் வாழ்த்திட
உலகினில் இருப்பேன்
உன் உரிமையென்றும்
உனக்கென்ன தருவேன்
உன்மழலை தமிழில்
மதி மயங்கி போனனேன்
உன்குரல் உலகம் கேட்டிட
உறங்காது உழைப்பேன்
உனக்கு நான்
தருவது கல்வியம்மா
தவறாது கற்றால்
என்றும் உனக்கு வெற்றியம்மா!!!!
வீரத்தை பழகிடு
நீ - இப்போதே
உலகம் காத்திருக்கும்
உன்னை பயங்காட்டவே
இல்லதாருக்கு நீ
இரங்கு...
இல்லையென்று சொல்லிடாது
நீ பழகு
குணம் தானே கோவிலம்மா
அதில்
அணையாத விளக்காய்
பிரகாசிக்கட்டும் அன்பம்மா !!!!
ஓடிவரும் பிள்ளாய்
தடைகளை தகர்த்திடுவாய்
தளராது ஓடிடுவாய்
தந்தை உனக்கு சொல்வது
இத்தனையே
நீ
முயற்சித்தால் வென்றிடுவாய் உலகையே
நீ
முயற்சித்தால் வென்றிடுவாய் உலகையே
பாண்டிய இளவல் (மது. க)