அந்த இள வேனில் காலம்
முத்துக்கு முத்தாக சொத்துக்கு
சொத்தாக எங்கள் இருவரையும்
கருதி எம் தந்தை கனவெல்லாம்
இன்று நிஜமாச்சு
எங்கள் இருவரையும் பிரிக்க
எண்ணிய காலம் மலையேறி
போயாச்சு
இளமையின் நிழலில் ஊஞ்ச்சலாடி
மகிழ்ந்த அந்த காலம் எல்லாம்
என் கண் முன்னே வருகுதடி என்
தங்கமே
இன்றோ நான் ஊன்றுகோல் கூட இன்றி
தள்ளாடி செல்கிறேன் என் தங்கமே
சொந்த ஊரிழந்து சொந்த உறவிழந்து
தனி மரமாய் இன்று நான்
தவிக்கும் தவிப்பை என்னவென்று
சொல்வேனடி தங்கமே
இளமையும் பணமும் இருக்கும் வரை
கூடி யாவரும் வருவரெடி தங்கமே
கூடி வருவர்
அவ்விரெண்டும் போனபின் திரும்பியும்
பாரார் எடி தங்கமே
திரும்பியும் பாரார்
குளம் வற்றியதை போல என் கையும்
வரண்டுவிட்டதாலோ என்னவோ
என் பக்கம் யாரும் திரும்பிப்
பாரார்.