புதிய கீதை 2 கோழையாக வாழாதே

புதிய கீதை (2) கோழையாய் வாழாதே

ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக மாளாதே!
ஏழையாகி மாண்டாலும் கோழையாகி வாழாதே!
கோழையாக வாழ்ந்தும்நீ குற்றம்துணை யாகாதே!
கோழையாகி வீழ்ந்தும்நீ சுற்றம்பிணை யாக்காதே!

ஏழையென வாழ்வதுதான் இயல்பான இன்பமே!
கோழையாகி மாள்வதுதான் கொலையாகும் துன்பமே!
ஏழைமனம் என்றும் இனிமை நிலைபற்றும்.
கோழைத்தனம் கொல்லும் உரிமைக் கொலைக்குற்றம்.

கொலையும் கொள்ளையும் கோணக்கோ ழைக்கு!
எதிர்க்கும் வலிமை எட்டாப் பாவிக்கு!
நிலையது கிட்டாபே டித்தனம் மோகம்!
பதுக்கும் விலையேற்றம் பாவியர் கோழைமனம்!

கள்ளமாய் ஓட்டும்.கையூட்டும் காசுடன்
பொல்லாத பொய்யும் புகன்றிடும் வாக்குடன்
வல்லவராக வாய்ப்பேச்சு வாணிபத் தனமும்
வெல்லா வலிமையாம் கோழை அரசியலாம்.

காதல் மொழிந்து கனிய விழைந்துடன்
ஈதல் இணைந்து இனியக் கலந்துடன்
பேதம் மறந்தும் பிணையாக் கற்புடன்
மோதாக் களவும் முடியாது கோழையுடன்..

வன்மை யதுவும் வீரமும் அல்லவாம்
நன்மை யதனால் நேர்வதும் அல்லவாம்.
இன்மைச் செயலால் எதுபெற் றாலுமே
உண்மை அதுவொரு கோழமை யாகுமே!.

கோழை அவன்வழி ஆவதும் அதர்மமே.
வாழும் தகுதியும் ஆவதும் இலையே!
நாளை உலகம் நலம்பெற வேண்டியே
ஊளை அவனே ஒழிவதும் காண்பயே!

கொ.பெ.பி.அய்யா.

தொடரும்.............

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (8-Aug-14, 12:11 am)
பார்வை : 125

மேலே