பிராப்தம்

பிராப்தம்
===========

நீ தந்த சஷ்ய சாத்திரத்தின்
புத்தகம்
எனக்கொரு பிரேம காவியமாயிருந்தது
அப்புத்தகத்தில்
அடைகாத்திருந்த ஆலிலை
நிந்தன் பச்சை நரம்புகளை
நனவு கூறுகிறது
அதனுடைய ஊடுபுகும் தன்மையில்
இன்று உன் முகம் காணுகிறது

சப்தம் முழுவதும் சோர்ந்துபோன
பச்சிலையின் நினைவில்
ஒவ்வொரு தாளிலும்
ஒவ்வொரு இலையை
பாதுகாத்த பந்தத்தை
ப்ரேமையின் ரௌத்திரப் பிழம்பிற்கு
நான் இன்று
தானம் கொடுத்துவிட்டேன்

இலைகளாக இனி நாம்
புனர்ஜென்மம் எடுப்போம் ஆயின்
ஒரே நேரத்தில் பிறப்பெடுக்கவேண்டும்
அதில் நீ எனக்கொரு
காமினியாய் அல்ல
ஆனந்தத்தாலும் துக்கத்தாலும்
கண்களில் நிறைகின்ற
ஒரு துணையிலையாய் வேண்டும்

எல்லா ருதுக்களையும்
தாண்டிக் கடக்கின்ற சக்தியாய்
உதிர்ந்த இலைகளை பொறுக்குகின்ற
குழந்தைகளைக் காணும்போது
வசந்தத்தினுடைய இதயத்தில்
ஒரு மரண வாசம் பிறக்கிறது

எல்லா ருதுக்களையும்
தாண்டிக் கடக்கின்ற சக்தியாய்
உதிர்ந்த இலைகளை பொறுக்குகின்ற
குழந்தைகளைக் காணும்போது
உள்ளில் பூக்கின்ற சிரியும்
இலை விழுகின்ற காலத்தின்
காற்றுபோல் வீசிக்கொண்டேயிருக்கும்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (9-Aug-14, 12:07 pm)
பார்வை : 312

புதிய படைப்புகள்

மேலே