நிலவொன்று வினா ஒன்று கேட்ட போது

முழு மதி நிலவொன்று
எனை பார்த்து வினவியது
நானோ விடை பகராது
எனக்குள்ளே மௌனமானேன்

அந்த மௌனமும் நிசப்தமும்
ஒரு வினாவை அல்ல
ஓராயிரம் வினாவை
என் முன்னே நிறுத்தியது

நான் தொடர்ந்தும் மௌனமானேன்
கடல் கரை காற்று என்னை
மேலும் அசதிக்குள்ளக்கியது

நித்திரை வருவது போலிருந்த்தது
அரை கண் மூடியது போல
கடற்கரை மணல் மீது
கிடந்த என்னை
காற்று மெல்லென தடவி சென்றது.

நீரலையால் இழுப்புண்ட சிறிய
குச்சி ஒன்று கடல் அலையின் வழியே
மேலேளுந்தும் கீல்விளுந்தும்
உலக வாழ்வை நினைவு படுத்தியது.

அதுவே நிலா என்னிடம் கேட்ட கேள்வி கும்
பதிலானது.........................................................................

எழுதியவர் : புரந்தர (10-Aug-14, 10:22 am)
பார்வை : 104

மேலே