உன் விரலுக்குள் என் வாழ்வு-போட்டிக் கவிதை
உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ;
கரிசனக் களிம்புக்காரன்-நீ
தண்டித்ததும் கண்டித்ததும்
எனக்காய்;
என் நலன்களைப் பெருக்கும்
'AMPLIFIER ' நீ -
என் திறமைகளைக் கண்டுபிடிக்கும்
'DETECTOR' நீ-
என் தவறுகளைத் தடுக்கும்
'RESISTOR' நீ-
என் ஆழியில்
தோணி நீ;
உன் வாழ்வு முழுமையும் அர்ப்பணித்தாய்
என் வாழ்வுக்காய்;
சிலுவை சுமந்தாய்-நான்
சிறகடித்துப் பறக்க;
மெழுகாய் உருகினாய்-நான்
ஒளி தர;
தேனியாய்ச் சேகரித்தாய்-என்
தேவைக்காக;
சமைப்பதிலிருந்து சகலமும் கற்றுத்தந்தாய்
சௌக்கியமாய் நான் வாழ;
வெற்றிகளைக் கற்றுத்தந்தாய்
வெறுமையான தோல்விகளிலிருந்து;
துவண்ட போது தூக்கிவிட்டாய்
தோள்கள் கொடுக்கும் தோழனாய்;
என் அழகான வாழ்வுக்கு
ஆழமான எடுத்துக்காட்டு நீ-
என்னை விருட்சமாக்க
விதையாய் மடிந்த உன்னை விழைகின்றேன்-
என் மகவாய் வருவாயா நீ ???