அவளின் அஸ்திரம்

அவள் புன்னகை ஓர் சித்திரம்
அது ஒன்றே போதும் மாத்திரம்
போக்கிடுவாள் எந்தன் ஆத்திரம்
மாற்றிடுவாள் என்னை எந்திரம்
நினைத்தேன் என்ன இது மந்திரம்
புரிந்தது அது தான் அவள் தந்திரம்
அழகில் அவள் தேவதை கோத்திரம்
மறக்கச் செய்தாள் என் கதாபாத்திரம்
பின் காணாமல் போனது என் சரித்திரம்........

எழுதியவர் : ஆசான் ராஜா (11-Aug-14, 12:29 pm)
Tanglish : avalin asthiram
பார்வை : 255

மேலே