காதல் - தேன் சொட்டும் கவியாய் - இராஜ்குமார்
இளம் இலைகளுக்கு
இடையில்
கொத்து கொத்தாய்
தொங்குதடி - காதல்
புன்னகை வீசும் பூக்களாய் ..!!
ஓடும் அலைகளுக்கு
இடையில்
ஏறி ஏறி
இறங்குதடி - காதல்
கடலில் தவழும் படகாய் ..!!
தேடும் அழைப்புகளுக்கு
இடையில்
விட்டு விட்டு
சிணுங்குதடி - காதல்
கையில் நழுவும் கைபேசியாய் ..!!
தொடரும் இன்னல்களுக்கு
இடையில்
தொட்டு தொட்டு
தாலாட்டுதடி - காதல்
மனதை வருடும் இசையாய் ..!!
தூறும் தூறல்களுக்கு
இடையில்
வெட்டி வெட்டி
வீசுதடி - காதல்
வானில் வசிக்கும் மின்னலாய் ..!!
அலையும் எண்ணங்களுக்கு
இடையில்
திட்டி திட்டி
சிரிக்குதடி - காதல்
கவியில் மூழ்கும் கற்பனையாய் ..!!
புரட்டும் பக்கங்களுக்கு
இடையில்
மீண்டும் மீண்டும்
தோன்றுதடி - காதல்
தேன் சொட்டும் கவியாய் ..!!
- இராஜ்குமார்