மாற்று இருதயம் வேண்டும் வருவீர்களா மகாத்மாவே
மகாத்மாவே ..அன்று
வார்த்தைகளை ...
வாசித்தவர்களிடத்தில்
மௌனத்தின்
மகத்துவத்தை
புரியவைத்தவர்
நீவீர் ...
அடக்குமுறையினால்
அரசாண்டவர்களை
அகிம்சையால்
அடக்கிவைத்தவர்
நீவீர் ...
வன்முறையினால்
வரம்புமீறியவர்களை
மென்மையாய்
கண்டித்தவர்
நீவீர் ...
ஆனால்
இன்று
இந்த மனிதர்களின்
மனங்களை
மாற்றுவது யார் ?
"மதம்" பிடிக்கும்
களிறுகளையும்
கட்டிவிடலாம்
கயிறுகளால் ...
இந்த
"மதம்" பிடித்த
மனிதர்களை ?
நாங்கள்
சுதந்திர காற்றினை
சுவாசிக்க
உங்கள்
சுவாசங்களையும்
எங்களுக்களித்தீர் ...
ஆனால்
இன்று
லஞ்சப் பேய்களின்
பஞ்சு மெத்தையாய்
பாரதம் ?
திட்டங்களுக்கு
திரட்டப்படும் நிதியெல்லாம்
திரைகடல் கடந்து
தினம் ஒளிந்து கொள்கிறது
கருப்பு சந்தைகளில் ?
நூற்றி இருபது கோடி மக்களுக்கு
ஆயிரம் திட்டங்கள்
லட்சம் கோடிகளில் தீட்டியும் ..
மிச்சம் எதுவுமில்லை
ஏழைகள் ஏழைகளே ?
லட்சம் கோடிகள்
லஞ்சமாய் ..லகரமாய்
பெரிய மனிதர்களின்
பெட்டிக்குள் தூங்குகின்றன
வெகு பத்திரமாய் ?
ஏட்டில் மட்டுமே
ஏழைகளைப் பார்த்து
எக்காளமிடுகின்றன
எளிய திட்டங்கள் பல
எவர் குற்றமிது ?
நல் உணவு
நல் மருந்து
நல் இடம்
நற்கல்வியின்றி
நலிந்த மக்கள் மேலும்
நலிகிறார்கள் நவயுகத்தில் ?
தலைமுறைக்கும்
தங்கத்தட்டில்
தடபுடலாய் விருந்துண்டு
ஒருபுறம் பணத்தில்
ஓய்வில் மிதக்கும் மனிதர்கள் ...
அடுத்த வேளை உணவுக்கு
ஆயுள்வரை உழைத்தும்
அதரவு யாருமின்றி
மறுபுறம் பஞ்சத்தில்
மனமுடைந்து மல்லாடும் மனிதர்கள் ..
நிலை மாறாதோ ?
நிம்மதி பிறக்காதோ ?
நிச்சயமேதும்
நிகழவேண்டும்
நிகழ்காலத்தில் மகாத்மாவே ..
இந்தியாவின்
இதயமே கிராமங்கள் என்றீர்கள்
இன்று இதயமே
இற்றுப்போய் விட்டதே ..
இனி உடனேயொரு
" மாற்று இருதயம் வேண்டும் "
மகாத்மாவே
மறுக்காமல் நீவீர்
மறுமுறை பிறக்க வேண்டும்
இந்திய மறுபடி
இறக்காமல்
இருக்க வேண்டும்
வருவீர்களா ?
மகாத்மாவே ..
( இனிய சுதந்தர தின வாழ்த்துக்கள் நண்பர்களே )
*** குமரேசன் கிருஷ்ணன் **