தேனோடு பால் கலந்தற்றே……

பேதை பெதும்பை
மங்கை மடந்தை
அரிவை தெரிவை
அறிய முடியவில்லை
இதில்நீ எதுவென்று

சொர்க்கம்
இறந்த பின்
இறைவன் மடியில்
இருக்கும் வரை
உன் மடியில்

விழி தாழ்த்தி
கன்னம் உய்த்தி
லேசாய் கிறங்கினாய்
அப்படியே இரு
முத்தத்தை
அடுத்த ஜென்மத்தில் தருகிறேன்

எல்லா கடவுளுக்கும்
இரு மனைவிகள் என்றேன்
சிரித்துக் கொன்டே கூறினாய்
நல்ல வேலை நீ கடவுள் இல்லை

உன்னை பற்றி
இரண்டு வரி கவிதை எழுதினேன்
நீ ஒரு பக்கத்திற்கு
பாராட்டினாய்

எனக்கு அயுசு நூறு
ஏனேனில் நான்
காதலிக்கபடுகிறன்

அன்பே,
உன் நினைவுகள்
எனக்கு என்றும்
பாலில் கலந்த தேன்

எழுதியவர் : சின்னா (15-Aug-14, 12:06 pm)
சேர்த்தது : சின்னா
பார்வை : 116

மேலே