உண்மையில் சுதந்திரமா

ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது அத்தனையும் அனைவருக்கும் கிடைத்தது. ஆனால் இப்பொழுது எதுவும் இல்லாதவனுக்கு கிடைக்கவில்லை. இருப்பவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறான். எல்லாம் இருக்கின்றவன் கொடுக்கின்ற பதவிக்கு வருவதால் இருப்பவையெல்லாம் தனக்கே என நினைத்துக்கொள்கிறான்.

இதுதான் நிலைமை எனில் அத்தனை ஆண்டுகால போராட்டம் எதற்கு?.
அத்தனை உயிர் பலி எதற்கு?

எவனோ ஒருவன் கொள்ளையடித்தால் அது தவறு? சொந்த நாட்டுக்காரன் கொள்ளையடித்தால் அதற்க்கு பெயர் சம்பாதிப்பதா?

இப்போது இருக்கும் அரசியல் வாதிகளில் எத்தனைபேர் நூறு சதவீதம் நாட்டுக்காக அரசியல் பணிகளில் ஈடுபாட்டிருக்கிறார்கள்?

மேடை போட்டு பேசும் மூத்த தலைவர்கள் முதல் துண்டுப் பிரச்சாரம் செய்யும் தொண்டர்கள் வரை அத்தனை பேரும் தனக்காக, தன் குடும்பதிக்காக, தனது எதிர்காலத்திற்க்காக, தனது கட்சிக்காக, தனது பதவிக்காக என சுனநலம் விரும்பிகளாக மட்டுமே இருக்கிறார்கள்.

இதில் ஆங்கிலேயர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

உண்மையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் சிறிது கொடுத்து பெரிதாக கொள்ளையடித்தார்கள். இவர்கள் சிறிது இருப்பதையும் சேர்த்து கொள்ளையடிக்கிறார்கள்.

அவன் கோட் சூட் போட்ட ஆங்கிலேயன். இவன் கதர் சட்டை போட்ட ஆங்கிலேயன். அவ்வளவு தான்.
இதில் வெளி வேஷமிட்டு வெட்டிபேச்சு வீரவசனமெல்லாம் எதற்கு?

எங்கே இப்பொழுது அரசியல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது, சலுகைகள் கிடையாது, எந்தவொரு குடும்ப பந்தமும் இருக்க கூடாது, எந்த ஒப்பந்த வேலையும் பண்ணக்கூடாது, எவ்வித அதிகாரமும் கிடையாது?, ரேஷன் அரிசியைத்தான் சாப்பிட வேண்டும், எட்டுமணிநேரம் உழைக்க வேண்டும் என சொல்லிப்பாருங்கள்? எத்தனைபேர் அரசியலை தேடி வருகிறார்கள் என பார்ப்போம்?

நமக்கு பின்னால் சுதந்திரமடைந்த எத்தனையோ நாடுகள் இப்போது நம் நாட்டை விட எல்லாவற்றிலும் முன்னேறியிருக்கிறார்கள்.
ஏன் நம்மால் மட்டும் முடியவில்லை?

இதை எதனை பேர் சிந்தித்து இருப்பார்கள்.

இப்படி இருக்க எதற்கு சுதந்திர தின கொண்டாட்டம்?

இல்லை சுதந்திரதிற்க்கான அர்த்தம் யாருக்கும் தெரியவில்லையா?

எழுதியவர் : பிரபாகரன் (15-Aug-14, 1:27 pm)
சேர்த்தது : பிரபாகரன் செ
பார்வை : 85

மேலே