அம்மா - நாகூர் லெத்தீப்

பாலினமே
பெண்ணினமே
நீ தானே
உலகம்
நீ தானே உயிர்........!
உடல் தந்து
உடலில் உயிர் தந்து
ஈன்றவளே
பெற்றவளே........!
தாய்க்கு
நிகர்
தாயே நீதானே
தாய்மையும்
நீதானே.......!
சோதனை
வந்தாலும்
மன வேதனை
கொண்டாலும்
உனை இன்றி யார்
அறிவார்
எனை நீயே
அறிவாய்..........!
உலகத்தில்
எத்தனை
கோடி
சொத்துகள்
இருந்தாலும் தாயே
உனது பாசத்தை
விலை கொடுத்து
வாங்க முடியுமா......!
தனை
வருத்தி
சுகம் துறந்து
உறக்கம்
மறந்து
எனை காத்தவளே
எனை பெற்றவளே
உயிரே அம்மா..........!