ஆனந்த வாழ்வு

உயிரின் உயர்வு உவப்பதில் களிப்பதில்
காற்றில் கலந்த சுகந்தமாய்
அசைந்து செல்லும் மேகமாய்

ஊஞ்சல் தாலாட்டும் உறக்கமாய்
உறவுகள் பாராட்டும் நெருக்கமாய்
உலா வரும் நிலாவாய்

காதல் தந்த இனிமையாய்
காதல் முத்த உணர்ச்சியாய்
ருசிக்க வாழ்ந்து ரசித்திருப்போம்

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்திருப்போம்
ஆனந்த வாழ்வில் திலைத்திடுவோம்

எழுதியவர் : கானல் நீர் (20-Aug-14, 6:13 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : aanantha vaazvu
பார்வை : 115

மேலே