பசியும் மரங்களும்
![](https://eluthu.com/images/loading.gif)
பசி
வயிற்றை தடவ
பார்வைகள்
அரிசிப்பானையை நோக்குகின்றன....!
அரிசிப்பானைகள்
விவசாயிகளை நோக்குகின்றன ..!
விவசாயி
வயலை பார்க்கிறான்
வயல் வானத்தை பார்க்கிறது ....!
வானம்
மேகத்தை பார்க்கிறது
மேகம் பூமியை பார்க்கிறது ...!
பூமித்தாய்
தன் மேனியை பார்க்கிறாள் ..!
நிலமகளோ
மரங்களும் பசுமையும்
இன்றி
நிர்வாணமாக காட்சியளிக்கிறாள் ...!
மனிதா
செடிகளை நடு
மரங்களை வளர்
நிலமகளின் நிர்வாணம் நீக்கு..!
அன்று..
மழை வரும்
வயல் சிரிக்கும்
அரிசிப்பானை பொங்கும்
வயறு நிறையும் ....!
நிலமகள்
பசுமை பூ பூத்து சிரிக்கட்டும் ...!
மீண்டும்
மரம் வளர்
தலைமுறை தழைக்கும் ...!
@@@@@@@@@@@@@@@