ஏமாற்றம்

தென்னையை
நட்டு தண்ணீர்
விட்டேன் அது
தாகம் தீர்க்
இளநீர் தந்தது
எனக்கு.

எருமைக்கு
புண்ணாக்குப்
போட்டேன் அது
என்னையும்
பொதியையும்
சேர்த்துச்
சுமந்தது

பசுமாட்டுக்குப் பசி என்று
நான் புல்லுதான்
கொடுத்தேன் அது
எனக்குப் பால்
கொடுத்தது.

பூசாரிக்கு
ஐந்து ரூபாய்
மட்டுமே கொடுப்பேன்
அவர் என் காலடிக்கு
வந்து விபூதி கொடுத்துச்
செல்வார்.

நான் உண்ட
மீதி உணவை
தெரு நாய்க்குப்
போட்டேன் அது
கண்டதும் வலை
அட்டிவிட்டுச்
செல்கின்றது

பிச்சைக் காரனுக்கு
என்றோ ஒரு நாள்
பிச்சை போட்டேன்
அவன் இன்றும்
கண்டவுடன் கும்பிடு
போட்டுப் போறான்.

பத்து மாதம்
சுமந்து உயிர்
கொடுத்து உருக்
கொடுத்து பால்
ஊட்டி பார்த்துப்
பார்த்து வளர்த்து
ஆசைப் பட்டவை
அனைத்தும்
வாங்கிக் கொடுத்து
படிக்க வைத்து
ஆளாக்கிய என்
மக்களோ ஒட்டு
மொத்தமாக
அனைத்துக்கும்
சேர்த்துக் காட்டிய
பாசம் அன்னை
இல்லம் வரை

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (25-Aug-14, 8:11 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kavithai
பார்வை : 234

மேலே