துணிந்து வா போராடினால் நீ ஜெயிக்கலாம்

உலகத்தில் உபத்திரவம்
உண்டு
ஆனாலும் திடன் கொள்
ஜெயித்தவன்
ஏராளம் உண்டு

போராடினால் நீயும் ஜெயிக்கலாம்
துணிந்து வா
போராடு நல்ல போர் வீரனாய்
ஒரு இலக்கை நோக்கி

நம்பிக்கை எனும்
கேடகத்தை பிடித்துக் கொள்
அறிவு எனும் பட்டயத்தை
ஏந்திக்கொள்
பொறுமை எனும் மார்க் கவசத்தை
தரித்துக்கொள்

அகிம்சையின் வழியில் நட
அன்பெனும் பாதரட்சைகளை
தொடுத்துக்கொள்

சுயநலமாய் சிந்திக்காதே
தற்பெருமை கொள்ளாதே

உன் உள்ளத்தின் கதவுகளை
மெய்க்கு திறந்து வை
பொய்க்கு பூட்டு போடு

உன்னை தாழ்த்திக்கொள்
பொறுமையை காத்துக்கொள்

உண்மையாய்
போராடி போராளி ஆனவன் உண்டு
ஏமாளி ஆனவன் ஒருவனும் இல்லை

துணிந்து வா நண்பனே
நாளை
இணையத்தளங்களில்
உன் பெயரும் தேடப்படும்
பிறக்கும் குழந்தைகளுக்கு
உன் பெயர் சூட்டப்படும்
ஆண்டுக்குறிப்பேட்டில்
உனக்காக ஒரு நாள்
ஒதுக்கப்படும்
அந்த நாள்
நாளைய தலைமுறைகளால்
கொண்டாடப்படும்.


போராளி .
ஏனோக் நெகும்

எழுதியவர் : ஏனோக் நெகும் (26-Aug-14, 4:07 pm)
பார்வை : 417

மேலே