காதல் வருமா
கவிதை கொடுத்தால் காதல் வருமா
களவு கற்றால் காதல் வருமா
மௌனம் கற்றால் காதல் வருமா
மௌனமாய் இருந்தால் காதல் வருமா
அழகை பார்த்து வருமா
ஆஸ்தி பார்த்து வருமா
மதத்தை பார்த்து வருமா
மனதை பார்த்து வருமா
வரமா சாபமா காதல்;
வாழவிடுமா காதல்
தனிமை கொடுமை காதல்
மரணத்தின் மறுபெயர் காதல்