காதலின் புன்னகை
..."" காதலின் புன்னகை""...
எல்லோருக்கும் கிடைக்குமா
இதுவெல்லாம் நடக்குமா
என்றே எண்ணத்தோன்றும்
முதிர்ந்த கவிதைகள் இரண்டு
இளமையோடு இணைந்திருக்க
காலன் சற்று தன்னிலை தடுமாற
காதலிங்கு புன்னகை பூக்கிறது,,,
பக்கம் நீ இருக்கையில் எனை
துக்கம்விட்டு போகும்டி(டா)
மடு முட்டும் கன்றைப்போல்
மகிழ்ந்திடவே மனம்துடிக்கும்
கள்ளமுமில்லை காமமுமில்லை
கருத்துவேறுபாடு வந்ததுமில்லை
காலம் தாண்டிய காதலின் சாட்சி,,
பல் விழுந்தாலும் உன் சிரிப்பு
முத்தாய்பாய்தான் இருக்கிறது
தேகத்தின் சுருக்கம் சொல்லும்
நம் நேசத்தின் நெருக்கம்தனை,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
