ஆச்சரியமே
"அழாதட செல்லம் அம்மா இதோ வந்துடுவா" பச்சிளம் குழந்தையை தேற்றிகொண்டிருந்தான் நாதன்.
"ஏய் அங்க என்ன தலைபோற காரியம் பாக்கறே இங்க புள்ள அழறான்."
"இதோ வந்துட்டேன். ஏன் இப்டி கத்துறிங்க? கொஞ்சநேரம் பாத்துக்க முடில"
"அவனுக்கு பசிக்குது போல. அவன் என்ன வாய தொறந்து பசிக்குதுன்னு சொல்வானா? அவன பாத்துகரதவிட அப்படி என்ன வேல வுனக்கு?"
"அயோ கடவுளே..." சலித்தபடி குழந்தையை வாங்கிகொண்டு உள்ளே போனாள் மீனா.
"நா வேளைக்கு போறேன். எதாச்சும் வருபோது வாங்கிட்டு வரணுமா?"
"இல்ல வேணாம். உங்க அம்மா ஏதோ கேட்டாங்க என்னனு கேட்டுகங்க."
செருப்பை காலில் மாட்டியவன் திண்ணையை தண்டினான்.
அம்மவையும்தான்.
அழும் குழந்தை, பசிக்ககதான் என்று தெரிந்தவனுக்கு அம்மாவின் பசி தெரியாது போனது ஆச்சரியமே!
அவன் குழந்தையின் கண்ணீரை அவன் கரங்கள் துடைத்தது. இப்போது வயதான அந்த குழந்தையின் கண்ணீரை பூமித்தாய் ஏற்றுகொள்கிறாள்.