கலி காலம் -நகைச்சுவை

கலி காலம்
----------------

இந்த நூற்றாண்டின் இறுதியில் இப்படியும் நாட்டில் நிலவரம் இருக்கலாம்

தெருவில் சில்லறை வியாபாரிகள் சிலர் தங்கள் தங்கள் பண்டங்களை

கூவி கூவி விகின்றனர்,அது என்ன கேட்போமா? வாருங்கள் .


வியாபாரி 1 : தங்கம் வாங்கலையோ தங்கம் வாங்கலையோ

ஒரு கிராம் காசு பாத்து ருபாய் மட்டுமே; ஒன்று வாங்கினால்

ஒன்று இனாம் ; ஐயா வாங்க, அம்மா வாங்க தங்கமோ தங்கம்------------


வியாபாரி 2 : வெள்ளி வாங்குங்க ஐயா மாறே ; வெள்ளி வாங்குங்க அம்மா மாறே

10 கிராம் வில்லை ஒரு ருபாய் மட்டுமே ; நாளை விலை ஏறலாம்

வாங்க வாங்க வெள்ளி வாங்கலாம் .



சோமு ; ராமு அண்ணே பார்த்திகளா தங்கமும் வெள்ளியும் காய்கறி மாதிரி

மலிவாகி போச்சுது ஆனால் சவரன் விலையை தொடுதே அரிசியும்

பருப்பும்

ராமு: அண்ணே சோமண்ணே; குடி நீருக்கு ரேஷன் கார்டு வந்திருக்கு

ஒரு குடும்பத்துக்கு வாரம் 10 லிட்டர் தராங்களாம் .........


சோமு : இது தான் கலி முத்திய காலமாய் தோணுது

ராமு ; இப்போதைக்கு கிடைக்கும் காய் கறி விவரம் தெரியுமா சோமு அண்ணே

வெண்டக்காய் நூறு கிராம் இருபது ரூபாய்; கத்திரி நூறு கிராம் பாத்து ருபாய்

வெங்காயம் ஒன்று பாத்து ரூபாய் ; வாழைக்காய் ஒன்று ஐம்பது ருபாய் .....

கீரை மலிவா விக்குது, ஒரு கட்டு அறுபது ரூபாய் மட்டுமே!


சோமு : அண்ணே இது கனவல்ல ; இதுதான் இன்றைய நிலவரம்

ராமு : போக போக உணவிற்காக போர் மூளமோ? தெரியலையே

சோமு: இதுதான் கலி காலம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Sep-14, 9:29 pm)
பார்வை : 218

மேலே