அனைத்தும் சொல்லும்

உதிரும் பூக்கள் சொல்லும்
உதிராவிட்டால் ஒருவேளை பெண் தலையில்...
உதிர்ந்துவிட்டதால் இவ்வேளை மண் மடியல் !!!


நகரும் மணல் சொல்லும்
நகராதிருந்தால் ஒருவேளை நீர்சிறையில்...
நகர்ந்துவிட்டதால் இவ்வேளை கடற்கரையில் !!!


பறக்கும் பறவை சொல்லும்
பறக்காதிருந்தால் ஒருவேளை தொங்கும் கூட்டில்...
பறந்துவிட்டதால் இவ்வேளை எங்கும் காட்டில் !!!


காணும் கண்கள் சொல்லும்
காணாதிருந்தால் ஒருவேளை அந்தனென்று...
கண்டிருப்பதால் இவ்வேளை கவிஞனென்று !!!


எழுதிய கவிதை சொல்லும்
எழுதாதிருந்தால் ஒருவேளை கற்பனையில்...
எழுதிவிட்டதால் இவ்வேளை விற்பனையில் !!!


தீண்டிய பொழுதுகள் சொல்லும்
தீண்டாதிருந்தால் ஒருவேளை அற்பனென்று...
தீண்டியிருப்பதால் இவ்வேளை சிற்பனென்று !!!


சொல்லிய காதல் சொல்லும்
சொல்லாதிருந்தால் ஒருவேளை பித்தனென்று...
சொல்லிவிட்டதால் இவ்வேளை சித்தனென்று !!!


பொழியும் கண்ணீர் சொல்லும்
பொழியாதிருந்தால் ஒருவேளை என்விழியுடன்...
பொழிந்திருப்பதால் இவ்வேளை உன்வலியுடன் !!!

எழுதியவர் : முரா கணபதி (3-Sep-14, 6:45 pm)
Tanglish : anaitthum sollum
பார்வை : 151

மேலே