இரண்டு பயணம்

கரையில் நின்ற
ஓடம்
அலைகளில் அசைந்தது
வா என்றது
தென்றலும் அலைகளும்
வரவேற்றது வான் நிலவு
அமர்ந்தேன் நான்
மடியில் கணினியுடன்
நகர்ந்தது நதியில் ஓடம் !

இரண்டு பயணம்
ஒன்று நிலவில்
ஒன்று நினைவில் !
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (4-Sep-14, 10:35 pm)
Tanglish : irandu payanam
பார்வை : 77

மேலே