என் உயிருக்கு உயிரானவளே காத்திருகிறேனடி 555

என் சகியே...
நீயும் நானும் பள்ளி
பயிலும்போது...
சில நாட்களில்...
உன் பாதம் அருகே
என் பதங்களை பதித்து பார்த்தேன்...
நீ தொட்டு சென்ற
பூச்செடிகளை...
நான் தழுவி
பார்ப்பேன்...
நீ யோசித்த வண்ணம்
உன் எழுதுகோலை...
இதழ்களில்
வைத்திருப்பாய்...
உன்னை ரசித்த
வண்ணம்...
நானும் இதழ்களில் வைத்து
கடித்து உண்டுருகிறேன்...
உன் இதழ்களாக
நினைத்து...
நீ எனக்கு முன் வீட்டிற்கு
செல்வாய்...
நான் உன் இருக்கையில்
மணி நேரம் அமர்ந்துவிட்டு...
மீண்டும் வருவேன்
என் வீட்டிற்கு...
இன்று நீ குடித்து மிச்சம் வைத்த
குளிர்பானத்தை நான் குடிக்கிறேன்...
புன்னகை சிந்தியபடி
என் எதிரே நீ...
குடிக்க முடியாமல்
நீ வைத்தாயா...
இல்லை நான் ருசிக்கவே
வைத்தாயா...
கவிதை பேசும்
என் விழி அழகே...
நாளை மணமக்களாக
ருசிக்க வேண்டும்...
ஒரே இலையில்
நீயும் நானும்...
காத்திருகிறேனடி நான்
என் உயிரானவளே.....