என்னுள்ளே ஏதோ ஏதேதோ

மெல்ல துளிர்த்த குரலும்..
சட்டென உடைந்து போனது..
நீ பேசியபோது...!

எதிரே நீ வர..
மெளனமும் வெட்கமும்..
கைக்கோர்த்து வழி மறைத்தது...!

நீ தாண்டி செல்ல..
மோதி நின்றது உன் மூச்சு..
என்னை கொஞ்சம் பார் என்று...!

கேட்டு சலித்த பாடலும்..
புதிதாய் இசை வெளியீடானது..
என் மனதில்...!

திரும்பி திரும்பி பார்க்காதே..
என்னுள்ளே ஏதோ ஏதேதோ..
பல திருத்தங்கள்...!

பூ கொடுத்து...
என் காதலை பறிக்காதே...!

பைத்தியமாய் பின்னால் சுத்தி..
என்னை தனியே புலம்ப வைக்காதே...!

துள்ளி குதிக்காதே...
மகிழ்ச்சியில் தவித்து போகிறேன்...!

குழந்தையாய் எண்ணி ரசிக்காதே...
கவிஞனாய் மாறி வருணிக்காதே...!

கண்டபடி கிறுக்கி வைக்காதே-என் கனவுகளில்
ஓவியமாகிவிடுகிறேன் -உன் காதலின்..
ஆழத்தை அறிய முடியாமல்...!!

எழுதியவர் : மணிமேகலை (5-Sep-14, 8:22 pm)
பார்வை : 446

மேலே