அழுகின்ற விபச்சாரி
அழுகின்ற விபச்சாரி ..!
ஒத்த வயிறு பசி போக்க
ஒரு வழியும் தெரியலையே
தெரிஞ்ச்ச வழியெல்லாம்
திசை மாறி போயிடுச்சே ...
ஆக்கி நான் வடிக்க
அடுப்படிக்குள் அரசி இல்லை
ஊத்தி நான் குடிச்சு
உசிர் வாழ வேறு வழி ..?
ஒடிந்த உடலதனின்
ஒய்யார மேனியதை
மறைத்து நான் நடந்த
பட்டுக்கு விலை வைச்சான் ..
ஆடை அதை விலக்கி
அம்மணமாய் நான் காட்ட
விலை அது வைத்து
விரும்பி உண்டு போனாங்களே ..
சேலைக்குள் உடம் பொன்று
சோகமா அது இருக்க
அதை காண அவன் வந்து
ஆடீ முடிச்சு போவானே ..
மொத்த அவன் முகத்தில்
பொங்கும் சிரிப்பிருக்கும்
என்னை அடகு வைச்சு
என் சிரிப்பை அவன் எடுத்தான் ..
என் உடம்பை நான் காட்ட
எனக்கவன் முதலாளி
அவன் சொல்லில் நான் ஆடும்
அம்மண தொழிலாளி
ஆக்கம்
வன்னி மைந்தன்
காலம் -30-12-12