பகையை துணைகொண்டு

மனிதநேயம் மறந்த மனிதர்களுக்கு
தெரியுமா இந்த மண்ணின் மகத்துவம்
பணம் தேடி அலையும் நேரத்தில்
இனத்தின் மனம் தேடி அலைய
நேரமின்றி மாபெரும் கூட்டமே
உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு பக்கம் பசியால் வாடி வறுமையால்
இறப்பவர்கள் மறுபக்கமோ பணசெழிப்பில்
நோய் தேடி இறப்பவர்கள் பட்டினியால்
வாடுபவரை விட வறியவர் வியாதியால்
சாப்பிட இயலாத பகட்டானவர்கள்
இயற்கையும் பொறுமை காத்திடும் வரை
ஏதுமில்லை பிரச்னை இவ்வுலகில்
சீற்றம் கொண்ட இயற்கை யாவும்
அழிவை த்தந்திடுமே மனித மனதின்
சீற்றமும் அழிவிலே தான் முடிவுபெறும்
இதை அறியாமல் அனைவரும் அற்பமான
செயலுக்கும் அடுத்தவர்மேல் பகை கொண்டு
அடுக்கடுக்கான துயர் கொண்டு வாழ
பழகிவிட்டனரே பகையை துணைகொண்டு

எழுதியவர் : உமா (8-Sep-14, 9:12 pm)
பார்வை : 256

மேலே