தாவணியில் கோலமிடும் தேவதையே 555

என்னவளே...
நீ ஆசையோடு
கொடுத்த முத்தங்கள்...
என் கன்னத்தில்
மாறியது மச்சமாக...
உன் விழியின்
ஒளியில் நானும்...
என் நிழலில்
நீயும் இருக்க...
அணைத்துவிட துடிக்குதடி
என் மூச்சு காற்று உன்னை...
கிழக்கில் உதித்த கதிரவனும்
மயங்கிவிட ஓடிவந்தேன்...
வாசலில் கோலமிடுகிறாய்
தேவதையாய் தாவணியில்...
வெண்ணிலவும் நிற்குதடி
அதிகாலையில்...
உன்னை பார்த்த
வண்ணமே...
விண்ணில்
ஓடி மறையாமல்...
பணியில் நனைந்தபடி
நானும் நிற்கிறேனடி...
நாளை என் வீட்டு வாசலில்
நீ கோலமிட வேண்டுமடி...
என் அன்பு
மனைவியாக.....