சிரிப்பின் அலை கவிதை

*
குழந்தைகளை
மிரட்டிக் கொண்டிருந்தது
குழந்தைகளும்
விரட்டிக் கொண்டிருந்தார்கள்
கலையவில்லை.
பிறகு, எண்ணெய் பேப்பரைக்
கட்டித் தொங்கவிட்டார் அப்பா.
அதில் ஒவ்வொன்றாகப் போய்
ஒட்டிக் கொண்டுத் தவித்தன
அந்தக் குழல்விளக்கைச் சுற்றி
அலைந்தப் பூச்சிகள். - அதனை
அதிசயமாக வேடிக்கைப் பார்த்தார்கள்
அப்பொழுது மெல்ல அடங்கியது
அப் பூச்சிகளின் தொல்லை
இனிமேல் இல்லையெனக்
கைக்கொட்டி மகிழ்ந்தக்
குழந்தைகளின் சிரிப்பின் அலை…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (10-Sep-14, 9:18 am)
பார்வை : 99

மேலே