முன்ஜென்ம கவிதை நீ -சந்தோஷ்

வாழ்வு மயானத்தில்
தியான மமதையில்
சடலமாய் கிடந்தவன்
என்னில் உயிராய்
நுழைந்த ஆவி நீ.

தனிமை மூட்டிய தீயில்
வெடவெடத்த என் கவிகளுக்கு
உறவுப்போர்வை
போர்த்திய சேவகி நீ.

ஒரு நேர்க்கோட்டில்
பயணிக்காத என்
கோணல் குணங்களை
திசைமாற்றி
என் பாதச்சுவடுகளை
இலட்சியத்தடத்தில
அடையாளமிட
துடித்திடும் மங்கையே..!

நீ யார்..
என்னை கட்டுப்படுத்த?
திமிர்க்கேள்வி கூட
எழுமால் கட்டுப்பட்டுக்கொண்டான்
இந்த கர்வங்கொண்ட
எழுத்தாளன்..!

எதுவுமே படைக்காத என்னை
எதுஎதுவாகவோ படைக்கவைத்தாய்
இது என்று அறியாமல்
அது என்று தெரியாமல்
மதுக்குடித்த போதைப்போல
சந்தோஷமிடுகிறேன்

என் இதயக்குடுவையில்
நீ ஊற்றிய உறவுச்சாராயம்
உன்னிடம் மட்டுமே
அன்பு பாசமென்று
உரைத்திட நினைத்திருக்கும்தானே?

பார்த்தாயா.. !
குடிகாரனின் புத்திப்போல
ஊர்முழுக்க உளறிக்கொண்டிருக்கிறேன்.

பரவாயில்லை... பரவாயில்லை
இந்த எனது உளறல்கள் கூட
நீ கவிதை என்று ரசிப்பாய்.

ஏனெனில்
நீ என்
முன்ஜென்மத்தில் கவிதை..!
நான் உன்
இந்தஜென்மத்தின் குழந்தை..!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (10-Sep-14, 1:51 pm)
பார்வை : 274

புதிய படைப்புகள்

மேலே