இடை அழகி
இடுப்பு சிறுத்தவளே
கொண்டை பெருத்தவளே
அம்பு விழிப் பார்வையை
வேகமாக வீசியவளே...!!!!
உன் குறும்புப் பேச்சிலே
சிக்கியது என் அரும்பு மீசையடி
உன் அசட்டுச் சிரிப்பிலே அடியோடு
சாய்ந்தது என் இள நெஞ்சமடி...!!!
அடியே இடுப்பு சிறுத்தவளே
நீ இஞ்சித் தோட்டத்தில்
வஞ்சியோடி...!!!
பிரமனின் கஞ்சத்தனம்
புரியவில்லையடி உன்
இடையைக் கண் நோக்கும்
வரையிலும்...!!!
வஞ்சி உன்னைக் கெஞ்ச
காளை என் நெஞ்சம் அஞ்சுதடி
இருந்தும் என் ஆசை உள்ளே
கெஞ்சுதடி...!!!!
இடுப்பு சிறத்த பெண்ணே
இடை மேலே என் கரம் பட
இடம் கொடுப்பாயோடி இல்லை
முறையோடு கை கோர்க்க நாள்
பார்க்கையோடி....!!!!!