வெல்வதற்கானப் போரிது-வித்யா
![](https://eluthu.com/images/loading.gif)
வெல்வதற்கானப் போரிது-வித்யா
இன்றென்மனம் போர்க்களத்தில்...........
அங்கே......
அங்கு ஆயுதங்களில்லை
வாளில்லை
மனிதரில்லை
மிருகங்களில்லை
குருதி வடியவில்லை
குண்டுகள் வெடிக்கவில்லை.....!!
ஆம்....
ஒரு போர்க்களத்தின் வன்மை
எண்ணங்களுக்கிடையேயான போரிது.....!
ஒரு பக்கம்.......
என் துக்கங்கள்
என் வெறுப்புகள்
என் கோபங்கள்
என் பிடிவாதங்கள்
நான் வெல்லவேண்டிய எதிரிகள்..........!!
மறு பக்கமோ....
என் காதல்
என் அமைதி
என் மகிழ்ச்சி
என் நம்பிக்கை...........
-இவையெல்லாம் நான் அடைபடவேண்டிய கூண்டுகள்......!!
இப்போரில்
நான் வென்றால்..........
என்னிதயத்திற்கு
மகுடம் சூடிக்கொள்வேன்....!!
என் அறிவில்
வெற்றிக்கொடி ஏற்றுவேன்.....!!
என் அமைதிக்கானப பாடலை
நானே பாடிக்கொள்வேன்.........!!
இல்லையேல்.......
என்ன செய்யப்போகிறேனென்று
எனக்கேத் தெரியவில்லை.......!