உடைந்துப் போன உருவம் நான் - இராஜ்குமார்
உடைந்துப் போன உருவம் நான்
=================================
பின்னங்காலால் வாழ்வில் தத்தி தத்தி
முன்னே செல்லும் தவளை போல
முன்கால நினைவால் கத்தி கத்தி
நெஞ்சில் நிறைந்த உயிராய் ஆனாய்
தவளையால் சிதறி போன நீரைப்போல்
காதலால் கதறி அழும் என்னைப் பார் ..!!
தவளை வாழ குவளை நீர் போதும் ..
நானும் வாழ கவலை என்னை சூழும் ..!!
மடிந்துப் போகும் மனச் சிறையில்
தனித்து உருகும் உள்ளம் பார் ..!
கடிந்துப் பேசிய சில சொல்லால்
உடைந்துப் போன உருவம் நான் ..!!
- இராஜ்குமார்
நாள் : 26 - 5 - 2011