மரணம் மறு ஜனனம் - காதலில் மட்டும் - கவிஞர் சி அருள்மதி
மரணம் மறு ஜனனம் - காதலில் மட்டும் !
உன் கையைப் பற்றியவுடன்
கைரேகைகளும்
வெட்கக் கவிதை வாசித்தன !
உன் விழி ஈர்ப்பில்
என் இதயம் ஒட்டிக்கொண்டது உன்னில் !
உன் இதழ் வரிகளை வாசிக்க
என் வாய் குவித்தேன் உன்னருகே
என் குரல்வளைச் சத்தத்தை
உன் சுவாசம் விழுங்கிக் கொண்டது !
உன் இதயத் துடிப்பு
என் கவிதையின்
இசைக் குறியீடானது !
உன் மார்புச் சூட்டில்
மெழுகாய் உருகி
உன் இடுப்பு வளைவில்
சரிந்த இதயம்
உன் பாதக் கொலுசின் ஓசை கேட்டு
உயிர்பெற்றது !