தமிழ்

அ ஆ இ ஈ....
கிறுக்கலை மறந்த
A,B,C,D யை வரைந்த குழந்தைகள்....
அம்மா இங்கே வா வா...
நிலா நிலா ஓடி வா...
பாடல் தெரியாத
baa baa black sheep பாடும் பிள்ளைகள்
ஆங்கிலம் படித்தால்தான் கொவுரவம் என்பதற்காக
அவர்களின் தாய்மொழி அறிவை கொல்லத் துடிக்கும்
அவர்களின் பெற்றோர்கள்...
தன் குழந்தை அழும் போது
தன் தாய் மொழியான
'அம்மா' என்றுதான் அழுகிறது
என்பதை மறந்தவர்களாய்.....
-------------------------------------------------------------------------
ஆங்கில அறிவு முக்கியம்தான்
ஆனால்
தாய்மொழி அறிவை கொன்றுதான்
பயில்வதா????
ஆங்கிலத்தை வளர்க்கும் அதேவேளை
தன் மொழியையும் வளர்க்கலாமே.....
அன்பு வேண்டுகோளுடன்......
-மூ.முத்துச்செல்வி