+கையெழுத்துக்களின் அணிவகுப்பு+

பூக்களின் கையெழுத்து வாசமாகி
===பூமியெங்கும் சுற்றிடுதே!
மேகத்தின் கையெழுத்து மழையுமாகி
===பூவைசுவாசிக்க வைத்திடுதே!

கடலின் கையெழுத்து அலைகளாகி
===காலைத்தொட்டே சென்றிடுதே!
கற்பனையின் கையெழுத்து கவிதையாகி
===மனதைத்தொடவே முயற்சிக்குதே!

உடலின் கையெழுத்து மூச்சுமாகி
===உலகையிங்கே இயக்கிடுதே!
உழைப்பின் கையெழுத்து வியர்வையாகி
===உண்மையாகவே உயிர்தருதே!

இரவின் கையெழுத்து நிலவாகி
===வானமெங்கும் உலவிடுதே!
பகலின் கையெழுத்து சூரியனாகி
===பலரும்வாழ உதவிடுதே!

இளமையின் கையெழுத்து காதலாகி
===இவ்வுலகத்திலே அலைந்திடுதே!
காதலின் கையெழுத்து கல்யாணமானால்
===கடவுளுக்குநன்றி சொல்லிடுதே!

ஏழ்மையின் கையெழுத்து பசியாய்போனால்
===ஏதோதவறென அறிந்திடுவோம்!
ஆளுவோர் கையெழுத்து ஏமாற்றமென்றால்
===அடித்தேவீட்டுக்கு அனுப்பிடுவோம்!

இந்தக் கையெழுத்து அழகாய்பட்டால்
===இனிதாயிங்கே உரைத்திடுவோம்!
சொந்தக் கையெழுத்து பிடித்ததுவென்றால்
===சொல்லிவிடுவீர் சொந்தங்களே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Sep-14, 8:26 pm)
பார்வை : 461

மேலே