உன்னை வெறுக்கிறேன்

ஆம்,
.........உன்னை வெறுக்கிறேன்...!!!!
என் அழகியின் அங்கம்தனை
காணவிடாது மறைக்கும் - அவளின்
துப்பட்டாவே...!
ஆம்,
..........உன்னை வெறுக்கிறேன்...!!!!
நானிருக்கையில் இன்னும் என் - தாரம்
அவளை தாங்கி நடக்கும் அவள்
காலணியே...!
ஆம்,
..........உன்னை வெறுக்கிறேன்...!!!!
கட்டியணைக்கும் கணவன் எனைவிடுத்து -தினம்
உன்னை அவள் அணைத்துக் கொள்வதால் ,அவள்
கைப்பை யே...!
ஆம்,
..........உன்னை வெறுக்கிறேன்...!!!!
எனையும் என்னவளையும் ஒன்றிணைப்பதாய் - ஒரு
பொய்சொல்லி இன்னும் அவள் நெஞ்சில் ஒய்யார ஊஞ்சலாடும்
தாலியே...!
ஆம்,
..........உன்னை வெறுக்கிறேன்...!!!!
குத்துக்கல் போல் அருகிருக்கும் மாமன் - எனையும்
விடுத்து உனையே அணைப்பதால் அவள்
தலையணையே..!
ஆம்,
..........உன்னை வெறுக்கிறேன்...!!!!
கரம் பற்றி நடந்து செல்லும் - இனிய
வேளையில் தடங்களாய் அமைந்துபோன அவளின்
வளையலே...!
ஆம்,
..........உன்னை வெறுக்கிறேன்...!!!!
அவள் வேட்கையுணர்ந்து தாகம் தணிக்க - கணவன்
நானிருக்கிறேன் எனினும் எனைமுந்தி சென்றுவிடும்
தண்ணீரே...!
ஆம்,
..........உம்மை வெறுக்கிறேன்...!!!!
என்னவளை இத்தனை வருடமாய் - எனை
விட்டு பிரித்து வைத்த என் மனைவியின்
பெற்றோரே...!
எனினும் உங்கள் யாவருக்கும்
........நன்றி சொல்கிறேன் ...!!!
நானில்லாத வேளையில் என் ஓவியம் ஆனவளை
களைந்து போகாது காத்துக்கொள்ளும் - நம்பிக்கையை
எனில் தந்துச் சென்றதற்காய்...!!!!!!!
நீழும் என் நிம்மதி .......
By
Jenni.C