மனிதம் மறைந்த மொழியாகும் - இராஜ்குமார்

மனிதம் மறைந்த மொழியாகும்
===============================

ஈட்டிய வருவாய்
வீட்டின் பூட்டிற்கே
போதவில்லை - இதில்
குடல்பசி எப்படி குறையும் ?

தெருக்களை தேடி
புல்லாங்குழல் ஊதிய
உதட்டிற்கு ஊதியம்
என்னவோ - இதில்
உள்நாக்கு எவ்வழி தேடும் ?

ஆய்வு தேடல் அதிகாரி
ஒற்றை தாளுக்கு ஓடினால்
குடிசை மட்டுமே நிழலாகும்
மாடி மதிப்பு மறைவாகும்

தேர்வுகளின் முடிவுகள்
தேர்தல் முடிவையே சாரும்
நடத்துனராக அனுபவம் வேணா
அதிகாரியாக அறிவும் வேணா
தாள்கள் கைமாறினால் போதும்

மகிழ்ச்சி முழுதாய்
மகிழுந்தில் மறைந்தால்
மாறுகிற மனிதன்
மனதில் - மனிதம்
மறைந்த மொழியாகும்

- இராஜ்குமார்

நாள் ; 17 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Sep-14, 7:13 pm)
பார்வை : 138

மேலே