விபத்து

தினசரியை தினம் பிரித்தால்
இங்கொன்றும்
அங்கொன்றுமாக இல்லாமல்
எங்கும் ஏற்படும் விபத்துக்கள்
ஏற்படுத்துகின்றனவே ..
மன கலக்கம்..
மணம் புரிந்து மாதம் ஒன்று
முடியவில்லை.!
மணப்பெண் சாலை விபத்து ஒன்றில்
உயிர் துறந்தாள்..
பள்ளி சாலைக்கு மிக அருகே
சீறி வந்த பேருந்து அது
சிறார் மூவர் உயிர் குடிக்க ..
இன்னும் பல காணுகின்றேன்..
செல் போன் பேசிக்கொண்டு
ஓட்டுகிறார்
சிலர்!
சிறிதும் வேகம் குறைக்காமல் சிலர்!
வாகனத்தை ஓட்டுபவர்
மனதில் எல்லாம்
நீ இருப்பதில்லை போலும்!
இறைவா..இனியேனும்
நீ இருத்தல் வேண்டும்..!

எழுதியவர் : karuna (23-Sep-14, 8:33 am)
Tanglish : vibathu
பார்வை : 175

மேலே