உன் காதல் நிஜமில்லையே
என் கனவு காதலியே
உன் காதல் நிஜமில்லையே
உறக்கம் கலைந்தவுடன்
என்னை பிரிவதனால்
இமைகளின் நடுவே ஊடுருவி
கண்களுக்குளே வாழ்ந்துவிடும்
கனவுகளுக்கே முன்னுரிமை
கனவு என்பதே பெண்ணுரிமை
கருப்பா சிவப்பா தெரியாமல்
களைந்த சுவடும் அறியாமல்
உன்னை நான் தேடிக்கொண்டு
இரவில் மட்டும் உடனிருந்தேன்